வெள்ள பாதிப்பால் சோலி முடிந்த நயன்தாராவின் வசூல்.. கல்யாண ராசி இன்னும் விட்டு வைக்கல

Actress Nayanthara Annapoorani Movie Collection: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின் அதே இளமை வேகத்துடனும் உற்சாகத்துடனும் விக்னேஷ் சிவனின் ஆதரவுடன் நடிக்க வந்தார். சமீபத்தில் நயன்தாராவின் ஜவான் நன்றாக ஓடிய நிலையில் சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்ட் ஆக அவர் எதிர்பார்த்து இருந்த அன்னபூரணி அவரைக் காப்பாற்றினாரா என்பதே கேள்வி.

தமிழ் சினிமாவில் நாயகியை மையப்படுத்தி எடுத்த படங்கள் சில தோல்வியடைந்த  பட்சத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இது மாதிரி படங்களில் தன் செம்மையான நடிப்பால் நாயகியின் அழுத்தத்தை பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார். அதே பார்முலாவை அன்னபூரணியில் பயன்படுத்தினார்.

சாப்பிட பிடிக்கும் சமைக்க பிடிக்காது என்று பெரும்பாலான பெண்கள் புலம்பி கொண்டிருக்க இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் களம் இறங்கிய அன்னபூரணி லட்சியத்தை அடைந்தாரா? வசூலில் வென்றாரா?

நீலே கிருஷ்ணா இயக்கத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 75 ஆவது படமான அன்னபூரணியில் சமையல் கலைஞராக கலக்க வந்தார். 2023 டிசம்பர் 1 வெளியான அன்னபூரணியின் முதல் நாள் வசூல் 80 லட்சம், வார இறுதியில்  வசூலை எதிர்நோக்கி இருந்த நிலையில் மழை புயல் வெள்ளத்தால் அன்னபூரணி நிலை குலைந்து போனாள். இயற்கையும் சதி பண்ணியது அன்னபூரணிக்கு.

ஒரு படத்தின் வெற்றி தோல்வியை அது வெளியான முதல் வாரமே தீர்மானிக்கிறது. அந்த வகையில் அன்னபூரணிக்காக நயன்தாரா மட்டுமே ஆறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய நிலையில் படத்தின் மூன்று நாள் வசூல் கிட்டத்தட்ட 2 கோடி மட்டுமே.

சென்னையின் புயல் வெள்ளத்தால் தட்டு தடுமாறிய அன்னபூரணி. வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறார்.  அபூர்வ சகோதரர்கள் கமலை போல் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தப்பு கணக்கு போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே என்று விக்னேஷ்சிவனுடன் புலம்பி வருகிறார்.