இளசுகளை கிறங்கடித்த கோடான கோடி நிகிதாவா இது.? புள்ள குட்டியோட செட்டிலான வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ மற்றும் சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ என்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிகிதா. அதன் பிறகு இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், ஒரு சில படங்களில் சிறு சிறு காட்சிகளில் தோன்றி மறைந்தார்.

அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ‘கோடான கோடி’ என்ற கவர்ச்சி பாடலில் நடனமாடி இளசுகளின் மனதை கவர்ந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘போங்கு’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார்.

அதன் பிறகு பெரியளவில் பட வாய்ப்பு கிடைக்காததால், முன்னணி நடிகையாக வலம் வர முடியாத நிகிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு சில படங்களில் நிகிதா நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

actress-nikitha-cinemapettai
actress-nikitha-cinemapettai

இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் சிலர், நிகிதாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என்றும் வியப்பில் ஆழ்ந்தனர். செம க்யூட்டாக இருக்கும் இந்த குடும்ப புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்குகள் குவிகிறது.

கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட கன்னட படங்களிலும், 6 தமிழ் படங்களிலும் நடித்திருக்கும் நிகிதா மீண்டும் நடிப்பதற்கு ரெடியாகி உள்ளாராம். அத்துடன் நல்ல கதாபாத்திரம் கொண்ட படத்தில் நடிக்க காத்திருப்பதாகவும் நிகிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.