நீண்ட நாட்களாக பிரபலம் ஒருவருடன் ரகசிய உறவில் இருந்த பிரபல நடிகை ஒருவர் சமீப காலமாக அவரை திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர் செய்து வந்தார். ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் 10 கோடி பணம் கொடுத்தால் போதும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் ஓரளவு அழகாக இருக்கும் நடிகைகளை அரசியல் பிரபலங்கள் தங்கள் வசம் ஆக்கிக் கொள்வது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்பவருடன் நீண்ட காலமாக உறவில் இருந்த நடிகை தான் சாந்தினி.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளனர். ஆனால் சமீபத்தில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்வதாக கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி ஏமாற்றி விட்டதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தார்.
அதன்பிறகு அமைச்சர் தனக்கும் அந்த நடிகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூற, விறுவிறுப்பாக நடைபெற்ற பஞ்சாயத்து திடீரென சத்தமில்லாமல் அடங்கியது. இந்நிலையில் மீண்டும் நடிகை அமைச்சரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதால் அந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
முதலில் தன்னை அமைச்சர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அடம் பிடித்து வந்த நடிகை தற்போது திடீரென பணம் கொடுத்தால் மட்டும் போதும் என சாந்தினி சொன்னதால் தற்போது பணத்திற்கு தான் இவ்வளவு நாடகமாடுகிறாரா? என அவர் மீது நெகடிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே போலீசார் மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதாம்.
