கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் விஜய் பற்றியும் அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரை பற்றியும்தான் பேச்சு. இதுவரைக்கும் விஜய்யிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது தெரியாத ரசிகர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விஜய்யை பிரபலப்படுத்துவதில் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. அவரைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் விஜய்யை கிண்டலடிக்கும் நோக்கத்தில் செயல்படும் மூக்கை உடைத்து கொள்கின்றனர்.
விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டவில்லை என்ற செய்திதான் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான முழு விவரம் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
இந்த நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக பிரபல நடிகையும் பிஜேபி கட்சியில் ஒருங்கிணைப்பாளருமான நடிகை காயத்ரி ரகுராமன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், விஜய் எப்போதும் பல ஏழை மக்களுக்கு ஒரு உண்மையான வாழ்க்கை ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் கோவிட் பிரதம பராமரிப்பு நிதி மற்றும் முதல்வர் பராமரிப்பு நிதிகளுக்காக நன்கொடை அளித்துள்ளார். அவர் பல மாணவர்களுக்கு கல்விக்கு உதவியுள்ளார். அவர் தனது ரசிகர்களுக்கு (குடும்பத்திற்கு) உதவுகிறார். ஊடகங்கள் ஒருவரின் தன்மையை கெடுக்கக்கூடாது. விஷயம் நீதிமன்றத்தில் இருந்தது, நீதிமன்றத்தில் முடிகிறது என்று கூறியுள்ளார்.

இதே காயத்ரி ரகுராம் தான் சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய திட்டத்திற்கு சூர்யா எதிர்த்ததால் அவரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் பதிவைப் போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்க்கு கொடுத்த ஆதரவை சூர்யாவுக்கு ஏன் கொடுக்கவில்லை என அவரது ரசிகர்கள் அவருடைய கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர்.