வெற்றிமாறன் எப்போதுமே பெரிய நடிகர்களை நம்பி படம் எடுக்க கூடியவர் அல்ல. தன்னுடைய கதை மேல் நம்பிக்கை வைத்து தான் படம் எடுத்து தொடர்ந்து வெற்றி மகுடத்தை சூடி வருகிறார். அவருடைய படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் என்பதை பலர் ஆசையாக வைத்துள்ளனர்.
அப்படிதான் இளம் நடிகை ஒருவர் வெற்றிமாறன் படத்தில் நடித்தால் மட்டும் போதும் என்றும், அதுதான் தனது வாழ்நாள் ஆசை என கூறியுள்ளார். ஏனென்றால் சிற்பி செதுக்குவது போல வெற்றிமாறன் தன்னுடைய படங்களில் உள்ள நடிகர், நடிகைகளை திறமையான நடிப்பை வாங்கி விடுவார். அதற்கு சான்றாக நம் முன் விடுதலை குமரேசனாக சூரியே காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தவர் விஜி சந்திரசேகர். சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்த விஜி தற்போது படங்களில் சில கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார்.
இப்போது அவரது மகளும் சினிமாவில் நுழைந்துள்ளார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான அயலி தொடரில் மைதிலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரத்தையும் கவனத்தையும் பெற்றார் லவ்லின். இந்நிலையில் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் லவ்லின் வெற்றிமாறன் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான அனல் மேலே பனித்துளி, பேட்டை காளி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் ஆசை என்று கூறியுள்ளார். மேலும் அவருடன் வேலை பார்க்க ஆவலாக இருப்பதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அயிலி தொடரிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர் வெற்றிமாறன் படத்தில் நடித்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு செல்வார் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இந்த வீடியோ கண்டிப்பாக வெற்றிமாறன் கண்ணில் பட்டால் இவருக்கு வாய்ப்பு கொடுப்பார் எனவும் சிலர் கூறுகின்றனர்.