40 பெண்களுடன் இரவு பார்ட்டியா.? உண்மையை உடைத்த பிரபலம்

Akash prabhakaran : அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் முறைகேடு சம்பந்தமான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது.

இதை அடுத்து ஆகாஷ் பிரபாகரன் தலைமறைவு ஆகிவிட்டார். அதேபோல் தொழிலதிபர் ரத்திஸ் வீட்டிலும் சோதனை நடத்திய நிலையில் அவரும் தலைமறைவாகியுள்ளார். இந்த சூழலில் ரத்தீஸ் வைத்த மது விருந்தில் 40 நடிகைகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிலும் அதில் கலந்து கொண்ட நடிகைகளுக்கு விலை உயர்ந்த ஹேண்ட்பேக் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது இங்கு நடிகைகளுக்கே பஞ்சம் இருக்கிறது.

ஆகாஷ் பிரபாகரனின் மது விருந்தில் நடிகைகள் கலந்து கொண்டது உண்மையா?

எப்படி 40 நடிகைகள் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள முடியும். அவர்களின் பெயர் பட்டியலை முதலில் போடுங்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பதால் அந்த நடிகை பெயரை பயன்படுத்துவது மிகவும் தவறு.

இந்த செய்தி எல்லாம் வதந்தியே என்று பிஸ்மி கூறியிருக்கிறார். மேலும் ஆகாஷ் பிரபாகரன் தயாரிப்பில் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் இதயம் முரளி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இப்போது ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த படங்கள் முடக்கப்படும் என்றும் பிஸ்மி கூறி இருக்கிறார். இதை கேட்டு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.