நானும் ரவுடி தான் ஹீரோ ஸ்ரீ தான்.. கைமாறிய ப்ராஜெக்ட், என்ன நடந்தது.?

Actor Shri: கடந்த சில நாட்களாகவே நடிகர் ஸ்ரீ பற்றி வெளிவரும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எப்படி இருந்த நடிகர் இப்படி ஆயிட்டாரே என பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

அதேபோல் அவரை எப்படியாவது கண்டுபிடித்து ட்ரீட்மென்ட் கொடுங்க என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு ஸ்ரீ மாறிப் போய்விட்டார்.

அது மட்டும் இன்றி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் வீடியோக்களும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஒரு வருடமாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட போதிலும் இப்போதுதான் அது தெரிய வந்திருக்கிறது.

நானும் ரவுடி தான் ஹீரோ ஸ்ரீ தான்

அதை அடுத்து சோசியல் மீடியா சேனல்களில் பலரும் இது குறித்து பேச தொடங்கி இருக்கின்றனர். இதனால் விரைவில் அவர் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க அவரின் தோழி தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஸ்ரீக்கு பல வருடங்களாக டிப்ரஷன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஒரு சில படங்களில் அவரை கமிட் செய்து, பிறகு ரிஜெக்ட் செய்த சம்பவமும் நடந்திருக்கிறது. அப்படித்தான் விஜய் சேதுபதி நடிப்பில் ஹிட்டான நானும் ரவுடிதான் படத்தில் இவர் தான் நடிக்க இருந்தாராம்.

விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் இவரையும் மரியான் பட நாயகி பார்வதியையும் கமிட் செய்து வேலைகளும் நடந்து இருக்கிறது. ஆனால் திடீரென அந்த ப்ராஜெக்ட் ஸ்ரீ கையை விட்டு நழுவியுள்ளது.

இதை தற்போது தெரிவித்துள்ள அவருடைய தோழி இது போல் பல சம்பவங்கள் ஸ்ரீக்கு நடந்திருக்கிறது. அது எல்லாம் சேர்த்து தான் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விட்டது.

இப்போது அவரைப் பற்றி பேசுபவர்கள் ஒரு வருடம் முன்பே செய்திருந்தால் இன்று அவர் மாறி இருப்பார். ஆனால் அவரைப் பற்றிய பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வருத்தத்துடன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.