கட்டுபடியாகாமல் கழண்டு போன தயாரிப்பாளர்கள்.. கடைசியா சரண்டரான ஆதிக் ரவிச்சந்திரன்.

ஒரு காலத்தில் பெரிய ஹீரோக்களின் கால் சீட் கிடைக்காதா என எதிர்பார்க்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இன்று தெறித்து ஓடுகிறார்கள். லைக்கா, ரெட் ஜெயன்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் நிலைமை இன்று மோசமான கட்டத்தில் இருக்கிறது.

தொடர் தோல்விகள் காரணமாக இவர்கள் படம் தயாரிக்க அச்சப்படுகிறார்கள். பெரிய ஹீரோக்கள், பெரிய சம்பளம் கேட்கிறார்கள் இதனால் ஒரு தரமான படத்திற்கு குறைந்தது இருந்தால் 300 முதல் 400 கோடிகள் இருந்தால் தான் பக்கத்தில் போக முடியும்.

ஆனால் மலையாள சினிமாவைப் பொறுத்தவரை படத்தின் கதை களத்திற்கும், தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் எப்பொழுதும் குறைந்த பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்த்து அசத்துகிறார்கள். அவர்கள் எடுக்கும் விதமும் முற்றிலும் தமிழ் சினிமாவில் இருந்து மாறுபடுகிறது.

இப்பொழுது அஜித்தின் அடுத்த படத்திற்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். அஜித் படம் என்று முதலில் ஆசைப்பட்டு வலையை விரித்தவர்கள் எல்லோரும் இப்பொழுது பின்வாங்கி விட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அஜித் தான்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ, மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்றவர்கள் அஜித் படம் என்று முதலில் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அஜித் கேட்கும் சம்பளம் தான் பெரும் ஷாக்காக அமைகிறது. 220 கோடிகள் கேட்கிறார். அதனால் இவர்கள் மட்டும் இல்லாமல் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கழண்டு விடுகிறார்கள். கடைசியாக ஹோமியோ பிச்சர்ஸ் ராகுலிடம் சரணடைந்துள்ளார் ஆதிக். அவர் இந்த படத்தை தயாரிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.