குயிலை வைத்து மயிலுக்கு பொரியா.? சரியான இடத்தைப் பார்த்து வலையை விரித்த ஆதிக்ரவிச்சந்திரன்

நல்ல கரண்ட்அப்டேட் ட்ரெண்டிங்கான இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன். காலத்துக்கு தகுந்தார் போல் up to date ஆக படம் எடுப்பவர். இதுவரை ஐந்து படங்கள் எடுத்திருக்கிறார், K-13, நேர்கொண்ட பார்வை, கோப்ரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஒரு சில படங்களுக்கு ரைட்டர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்.

இதுவரை ஆதிக், திரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவை வைத்து AAA, பகீரா. மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லீ , போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுது அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் வேலையை தற்சமயம் பார்த்து வருகிறார்.

ஆதிக்ரவிச்சந்திரன் தீவிரமான அஜித் ரசிகர். இவர் எடுத்த குட் பேட் அக்லி படம் அஜித்தை வெகுவாக கவர்ந்தது, இதனால் அஜித்தின் குட் புக்கில் இவர் பெயர் இடம் பெற்று அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கே கொடுத்துவிட்டார்.

அஜித்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததை அடுத்து இவர் இன்னும் உயர பறக்க ஆசைப்படுகிறார். இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் ரஜினியின் மருமகன் அனிருத்தை பிடித்தால் ரஜினியிடம் செல்லலாம் என்று அவருக்கு வலை வீசியுள்ளார்.

எப்பொழுதுமே ஆதிக்கிற்கு ஆஸ்தான இயக்குனர் என்றால் அது ஜிவி பிரகாஷ் தான். ஆதிக்கின் முதல் படத்தில் அவர் தான் ஹீரோ மற்றும் இசையமைப்பாளர். அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திலும் ஜி வி தான். ஆனால் இப்பொழுது அடுத்த படத்திற்கு அனிருத்தை நாடி சென்றுள்ளார். இவரை பிடிப்பதன் மூலம் அடுத்து ரஜினிக்காக கதை ரெடி பண்ண உள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அனிருத் மூலம் தான் ரஜினியை சென்றடைந்தார்.