நடிப்பு ராட்சசன் தனுஷிற்கு அடுத்தடுத்து குபேரன், இட்லி கடை என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது. இதுவும் போக “தேரே இஸ்கு மெயின்”என்ற ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி பிசியாக இருக்கும் தனுஷ் இரண்டாம் பாகம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார்.
அதே கெட்டப், மற்றும் தொடர்ச்சியா பிசியாக இருக்கும் காரணத்தினாலும் இவரால் இப்பொழுது நேராக அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்பு வேறு ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் தனுஷ் நடிக்காவிட்டாலும் அதன் பின் அவரின் பிசியான செடியூலை முடித்துவிட்டு நடிக்கப் போகிறாராம்.
அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்து போகும் தனுசை மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் மாறி கதையை மாற்றி அமைக்கிறார்கள். அந்த கெட்டப் இப்பொழுது போட முடியாத காரணத்தினால் அதற்கு ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனுசை உயிர் பிழைக்க செய்து இரண்டாம் பாகத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த படம் ராஞ்சனா. இந்த படத்தை அப்பொழுது ஆனந்த் எல் ராய் இயக்கினார். இந்த படத்தில் தனுஷ் இறப்பது போல் கிளைமாக்ஸ் காட்சிகள் வந்து ஒரு முடிவு பெற்றது. இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் கதையை ரெடி பண்ணி உள்ளனர்.
சுமார் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் இதை தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்க முடிவு செய்துள்ளனர். அதனால் தனுஷ் இறக்கும் காட்சியில் உயிர் பிழைப்பது போல் மாற்றி இரண்டாம் பாகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டனர். தனுஷ் தன்னுடைய படங்களை முடித்த பின்னர் ராஞ்சனா இரண்டாம் பாகத்தில் இணைகிறார்.