துருவ் விக்ரமுக்கு அடுத்தபடியா புது மாப்பிள்ளையை லாக் செய்த மாரி செல்வராஜ்.. எல்லாம் பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

Mari Selvaraj: பொதுவாக இயக்குனர்கள் கமர்சியல் படங்களை எடுத்து வரும் நிலையில் மாரி செல்வராஜ் தனக்கே உண்டான தனித்துவமான கதைகளை எடுத்து வருகிறார். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களின் பிரதிபலிப்பாக தான் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் கடைசியாக உதயநிதியின் மாமன்னன் படம் வெளியானது.

இந்த படம் ரிலீசுக்கு முன்பு பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். கபடி சம்பந்தமாக உருவாகும் இந்த படத்திற்காக பல வருடங்களாக துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் தனுஷின் கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது தனுஷ் படத்திற்கு முன்னதாக சமீபத்தில் புது மாப்பிள்ளை ஆன கவினின் படத்தை இயக்க இருக்கிறாராம். டாக்டர், டான் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் கவின்.

சிவகார்த்திகேயன் போல் சின்னதிரையில் இருந்த வெள்ளிதிரைக்கு வந்து ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். இப்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்தடுத்ததாக கவினுக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. இது எல்லாம் பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம் தான் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து நெல்சனின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சிவபாலன் இயக்கத்தில் கவின் மற்றொரு படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இப்போது மாரி செல்வராஜ் உடன் இணையும் வாய்ப்பு கவினுக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் மாரி செல்வராஜ் தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே கவின் படத்தை இயக்க இருக்கிறாராம். ஏனென்றால் இப்போது தனுஷின் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அவை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் உடன் இணைய இருக்கிறார். ஆகையால் அதற்கு முன்னதாக துருவ் விக்ரம் மற்றும் கவின் படங்களை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.