சமூக கருத்துக்களை திறம்பட சினிமா வாயிலாக கொடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சிகரமான இயக்குனராக வலம் வந்தவர் எஸ்பி ஜனநாதன்.
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படம் தான் அவர் இறுதியாக இயக்கியது. தற்போது அந்த படம் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளில் இருப்பதாகவும் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
எஸ்பி ஜனநாதன் இயக்கிய படங்கள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்தவை. எஸ்பி ஜனநாதன் இதுவரை இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை, லாபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இதில் ஈ என்ற படத்தை பார்த்துவிட்டு தனுஷ் வழிய போய் எஸ்பி ஜனநாதனிடம் தனக்காக ஒரு படம் செய்து கொடுங்கள் எனக் கேட்டாராம். உங்கள் கதையில் என்னை வைத்து ஒரு ட்ரை பண்ணுங்களேன் என வாய்ப்பு கேட்டாராம் தனுஷ்.
அதன் பிறகு தனுஷ் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றதால் அவருடன் மீண்டும் படம் செய்ய முடியாது நிலைமை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் எஸ்பி ஜனநாதன். அதுமட்டுமில்லாமல் தனுசை என்னால் நெருங்கவே முடியவில்லை எனவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

எஸ்பி ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில் நடித்தவர் நடிகர் ஜீவா. அச்சு அசல் மெட்ராஸ் பையனாக வாழ்ந்திருப்பார். அந்தப் படம் அச்சமயத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.