ரஜினியின் ஒரே படத்தால் மூடப்பட்ட தயாரிப்பு நிறுவனம்.. ஒரு வழியாய் அசுரனுக்கு பிறந்த விடிவு காலம்

80களின் பிற்பாதியில் இருந்து இப்போது வரை ரஜினியின் படங்கள் என்றால் திரையரங்கில் தாறுமாறாக ஓடி வசூல் வேட்டையாடும். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய அசுரனுக்கு, இப்போது விடிவு காலம் பிறந்திருக்கிறது.

கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவராக இருக்கிறார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நல்ல திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று துவங்கினார். தனுஷ் முதன் முதலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமான 3 படத்தை தயாரித்து, அதன் பிறகு தேசிய விருதுகளைப் பெற்ற காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட படங்களையும் எடுத்து புகழின் உச்சத்துக்கே சென்றார்.

அதன் பின் தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி படத்தையும் தயாரித்துள்ளார். வுண்டர்பாரின் 12-வது படமான ரஜினியின் காலா படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டமடைந்தார் தனுஷ். இதனால் தனது தயாரிப்பு நிறுவனத்தை அப்போதே மூடிவிட்டார். பல வருடங்களாக அதைப்பற்றி பேச்சுக்களும் இல்லை.

தனுஷ் பல பிரச்சனையில் இருந்ததால் அதை தொடங்காமலே இருந்தார். இவர் இந்த வருடம் ஒரு சில வெற்றிகளை பெற்றதால் மீண்டும் புத்துணர்ச்சியோடு தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதனால் தொடங்கும் போது இவர் ஆசைப்பட்ட, இயக்குனர் மாரி செல்வராஜை வைத்து படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

அவரும் சரி என்று சொல்லிவிட்டார். துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி விட்டு, அடுத்ததாக தனுஷ் உடன் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தனுஷே ஹீரோவாகவே நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.