புது கூட்டணியில் விக்ரம்.. முதன்முதலாக மாஸ் வில்லனுடன் இணையும் சியான்

After Thangalaan movie Vikram, SJ Surya alliance in chiyaan62: தமிழ் சினிமாவில் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக தன் உடலை உருக்கி என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் சியான் விக்ரம், ஆரம்பத்தில் தனது திரை வாழ்வில் பல கஷ்டங்களுக்கு இடையே தோல்விகளை மட்டுமே சந்தித்து தன்னம்பிக்கைக்கு உதாரணமாக  இருந்து சேதுவிற்கு பின்பு வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும் என்று பிசியாகிப் போனார்

சாமி, அந்நியன், பொன்னியின் செல்வன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கே எதிர்பார்த்த தங்கலானை! படத்தின் காட்சிகள் தனக்கு திருப்தி பட வில்லை என மீண்டும் மீண்டும் எடுத்து சியானை பாடாயப்படுத்துகிறாராம் பா ரஞ்சித்.

ட்ரெய்லரிலேயே  மிரட்டலான நடிப்பை  வெளிப்படுத்திய சீயான் விக்ரமின் தங்கலான் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்க பொங்கல், குடியரசு தினம், பிப்ரவரி என காலக்கெடு கொடுத்து இறுதியாக தங்கலானை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப் போவதாக கூறியுள்ளனர்.

Also read: முதல் வெற்றியை ருசிப்பதற்கு நொந்து நூடுல்ஸ் ஆன விக்ரம்.. விடாப்பிடியாக இருந்து மெருகேற்றிய பாலா

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சீயான் 62 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விக்ரம். கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி நடை போட்ட சித்தா படத்தின் இயக்குனர் SUஅருண் குமாரின் இயக்கத்தில்  ஜிவி பிரகாஷ் குமார் இசையில் சியான் 62 தயார் ஆக உள்ளது.

வசூலை எதிர்கொண்டு படங்களை இயக்காமல் சமூகத்திற்கு தன்னால் முடிந்த ஏதோ ஒரு சிறிய கருத்தை மக்களின் மனதில் பதிக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் திரைக்கதையை உருவாக்குபவர் SUஅருண்குமார். சித்தா படத்தில் கூட துப்புரவு தொழிலாளர்கள், பெண் குழந்தை துன்புறுத்தல்கள், பொது பிரச்சனையில் ஆண் மற்றும் பெண்ணின் இரு வேறு புரிதல்கள் என பல்வேறு அம்சங்களை கையில் எடுத்து சமூகத்தின் அநீதிக்கு எதிராக சாட்டையடி கொடுத்தார் இந்த இயக்குனர் SUஅருண்குமார்.

இப்படிப்பட்ட இயக்குனருடன் சியான்62 வில் விக்ரம் இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வில்லனது பெயரை கேட்டாலோ அதிரடியாக உள்ளது. தன் அபார நடிப்பினால் மார்க் ஆண்டனியை தூக்கி உயர்த்திய நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக இணைகிறார் என்பது ட்ரிபிள் போனஸ் ஆக உள்ளது.

Also read: விக்ரம் கேரியரை தூக்கி நிறுத்திய சூப்பர் ஹிட் படம்.. 21 ஆண்டுகளுக்கு முன் சிங்கம் போல வந்த சியான்