விக்னேஷ் சிவன் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போட்ட அஜித்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் AK63

அஜித் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் அஜித்தின் ஏகே 63 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக அஜித் ஒரு இயக்குனருடன் பணியாற்றினால் தொடர்ந்து மூன்று, நான்கு முறை அதை இயக்குனர் உடன் தான் படம் பண்ணுவார். அந்த வகையில் சிறுத்தை சிவா உடன் நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்கள் வரிசையாக அஜித் நடித்துக் கொடுத்தார். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அவருக்கு தான் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் இருந்தார்.

ஆனால் விக்னேஷ் சிவன் ஆசையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் அஜித். அதாவது ஏகே 63 படத்தை விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி இயக்க இருக்கிறார். மேலும் ஏகே 62 படத்தை தொடர்ந்து ஏகே 63 படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் சிறப்பம்சம் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.

ஏற்கனவே அட்லீ தளபதிக்கு தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் இப்போது முதல் முறையாக அஜித்துடன் கூட்டணி போட இருக்கிறார். மிகக் குறுகிய காலத்திலேயே பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ அங்கு சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் எடுத்துள்ளார்.

ஜவான் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அட்லீக்கு தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாரான அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் தற்போது இதற்கான கதையை அட்லீ தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் ஏகே 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.