சினிமாவில் மட்டும்தான் வயது வித்தியாசம் பார்க்காமல் நடிகர் நடிகைகள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து கொள்வது நடந்து வருகிறது. அதிலும் அப்பா வயது, தாத்தாவை வயது நடிகர்களுடன் இளம் நடிகைகள் சேர்ந்து சுற்றுவது எல்லாம் காலக்கொடுமை.
நடிகைகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என கூறினால் கோபப்படுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்ய ரெடியாக தானே இருக்கிறார்கள்.
அந்த வகையில் 29 வயது நடிகை ஒருவர் 56 வயது நடிகருக்கு மூன்றாவது மனைவியாக உள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. இத்தனைக்கும் அந்த நடிகருக்கு மகளாக ஒரு படத்தில் நடித்தார் அந்த நாயகி.
அந்த நடிகர் வேறு யாருமில்லை, நம்ம அமீர்கான் தான். தங்கல் படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் தான் ஃபாத்திமா சானா. சமீபத்தில் அமீர்கான் தன்னுடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதற்கு இவருடன் இருந்த தொடர்பு தான் காரணம் என பத்திரிகைகளில் எழுதினர்.
இதுகுறித்து சமீபத்தில் பாத்திமா தன்னுடைய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, முன்னரெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும், ஆனால் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது என்பதால் இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே தானாக அடங்கி விடும் எனவும் குறிப்பிட்டுள்ளார் பாத்திமா. இருந்தாலும் பாலிவுட்காரர்கள் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணி சொல்கிறார்கள் விரைவில் அமீர்கான் மற்றும் பாத்திமா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று.
