ஏஜெண்ட் அமர்-க்கு Tough கொடுக்க வரும் நடிகர்.. இயக்கத்திலும் அசால்ட் பண்ற மனுஷன்

அண்மையில் வெளியான “கூலி” படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல், ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத் இசையில் சுப்லாஷினி பாடிய இப்பாடலின் ராப் வரிகளை கோலார் இசைத்துள்ளார். இந்த பாடலுக்கு விஷ்ணு எடவன் எழுதிய வரிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த பாடலின் சிறப்பை மேலும் உயர்த்தும் வகையில், பூஜா ஹெக்டே மற்றும் செளபின் சாஹிர் செம டான்ஸ் பன்னிருக்காங்க. ரசிகர்கள் பாராட்டும் வார்த்தைகள் செளபின் சாஹிரை சுற்றி அதிகம் சுழலுகின்றன. கூடவே, இன்ஸ்டாகிராமில் மோனிகா பாடல் ட்ரெண்டாகும் நிலைமை உருவாகியுள்ளது.

மலையாள நடிகரான செளபின் சாஹிர், “கூலி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். முன்னதாக இயக்குநர் சித்திக்கிடம் உதவியாளராக பணியாற்றிய இவர், “கையேதும் தூரத்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

பின்னர் பிரேமம் படத்தின் பிடி மாஸ்டர் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.
சாய் பல்லவியுடன் சேர்ந்து நடித்த பாசமான காட்சிகள் மூலம், செளபின் பெரும் கவனம் பெற்றார். தொடர்ச்சியாக சார்லி, கலி, மகேஷிண்ட பிரதிகாரம், கும்பலிங்கி நைட்ஸ் போன்ற படங்களில் நடித்தார். இவரது வேடங்களில் உள்ள இயற்கையான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

செளபின் சாஹிரின் பான் இந்தியா புகழுக்கு காரணமானது “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படம் தான். இப்படத்தில் குட்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததோடு, தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்த படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படமாக சாதனை படைத்தது.

“மஞ்சும்மல் பாய்ஸ்” வெற்றிக்கு பிறகு, செளபின் சாஹிருக்கு “கூலி” படத்தில் தயாள் என்ற முக்கிய வேடம் கிடைத்தது. இந்த படத்தின் மோனிகா பாடலில், அவருடைய நான்சான்ஸ் டான்ஸ் ஸ்டைல் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது. மலையாளத்தில் தொடங்கி, தற்போது தமிழிலும் வெற்றி நடை தொடரும் நிலையில் உள்ளார். கூலி படத்துக்குப் பிறகு, இவருக்கான தனிச்சிறப்பு கவனம் பெருகி, அடுத்த பகத் பாசிலாக உருவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.