இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் திறமையான கதை வடிவத்தை இயக்குனர் மணிரத்னம் எழுதி உள்ளார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் அவ்வளவு எளிதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கவில்லை.
பல வருடங்கள் இதற்காக காத்திருந்து தற்போது தான் இப்படத்தின் பாகம்-1 ரிலீஸாகி மணிரத்னத்தின் கனவு படமாக திரையில் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பலராலும் போற்றப்பட்டு வரும் கதாபாத்திரம் என்றால் அது நந்தினி கதாபாத்திரம்.
இக்கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தை பார்த்த நடிகை மீனா, பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்போவதாக தான் நடித்த காலகட்டத்தில், தன்னிடம் வந்து கதை கூறும் போது தான் நந்தினி கதாபாத்திரத்திற்கு தேர்வானதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளதாகவும், தான் இப்படி யாரைப் பார்த்தும் ஒருபோதும் பொறாமைப்பட்டதில்லை என்றும் மீனா வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
நடிகை மீனா அண்மையில் அவரது கணவர் வித்யாசாகரின் மரணம் அவரை மனமுடைய செய்த நிலையில், தற்போது நடிகை மீனாவின் நண்பர்கள் அவரை உத்வேகப்படுத்தி வருகின்றனர். இதனிடையே மீனா, ஐஸ்வர்யா ராய் மீது கொண்ட பொறாமை உணர்வை வெளிப்படையாக சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.