1994 ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் ஒரு சரித்திரம் படைத்த நிகழ்வு நடந்தது. அதுதான் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற வருடம். அதன்பிறகு ஹிந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் நடிகையாக இறக்குமதி செய்யப் பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் உலக நாயகியாக வலம் வந்தார். மற்ற நடிகைகளைப் போலவே சினிமாவின் உச்சம் தொட்ட பின்னர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இருந்தும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வரும் இவர் ரன்பீர் கபூருடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது சக நடிகர் சரத்குமார் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதில் ஐஸ்வர்யா ராயின் குட்டி மகள் தற்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு அவரது உயரம் வளர்ந்து விட்டார். ஐஸ்வர்யா ராய் பொண்ணு ஆராத்யா புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்.
