அமிதாப் பச்சன் பேத்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? கோர்ட் வரை சென்ற ஐஸ்வர்யா ராய்யின் மகள்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட் பக்கம் சென்ற நிலையில் அவ்வபோது தமிழ் சினிமாவில் தலையை காட்டி செல்கிறார். அந்த வகையில் ரஜினியின் எந்திரன் படத்தில் நடித்த பிறகு கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய நந்தினி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போது பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த சூழலில் கோட்டு வரை சென்றுள்ளார் ஐஸ்வர்யா ராயின் மகள். அதாவது பாலிவுடில் டாப் ஸ்டாரான அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சன் உலக அழகி ஐஸ்வர்யா ராயை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார். இப்போது 12 வயதாகும் ஆராத்யா கோட்டு வரை சென்று வழக்கு தொடர்ந்து உள்ளார். அதாவது யூடியூப் சேனலில் தன்னுடைய உடல் நலத்தை பற்றி தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவதாக தெரிவித்திருந்தார். இவ்வாறு பொய்யான தகவலை பரப்பிய சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதன்படி இன்று ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா வழக்கு விசாரணைக்கு வரப்பட்டது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆராத்யா உடல் நலத்தை பற்றி தவறாக கூறிய சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டது. அதுமட்டும்இன்றி ஆராத்யா பற்றிய தவறான வீடியோக்களை உடனடியாக நீக்கவும் கட்டளையிட்டு உள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் நந்தினி கதாபாத்திரம் போல ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யாவும் துணிச்சலான மற்றும் தைரியமான குணம் உடையவராக உள்ளார். அதுமட்டும்இன்றி இந்த வழக்கில் ஆராத்யா தரப்பில் ஞாயம் கடைத்ததால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் அமிதாப்  பச்சன் குடும்பத்தில் இவ்வாறு நடந்துள்ளதால் இதை வேறு மாதிரி எடுத்துச் சென்று இருக்கலாம். எல்லாவற்றையும் சட்டப்படி செய்ய வேண்டும் என்று தனது பேரக்குழந்தைக்கும் அமிதாபச்சன் சொல்லிக் கொடுத்த இவ்வாறு செய்துள்ளது பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இப்போது இந்த செய்தி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.