ப்ளாப் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியலையாம்

தென்னிந்திய நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என வரிசையாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்தது.

இருப்பினும்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஆனால் இவர் நடித்து கடைசியாக வெளிவந்த டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய இரண்டு படங்களின் வசூல் மோசமாக உள்ளதாம். இரண்டு படங்களுக்கும் சேர்த்து மொத்தமே 10 லட்சம் தான் வந்துள்ளதாம். இது அந்த படத்தின் போஸ்டர் செலவுக்கு கூட பத்தாது என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பெண்களும் கார் டாக்ஸி ஓட்டுநராக இருக்கலாம் என்ற சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். மேலும் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் குவிந்தது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இந்த படத்திற்கு முதல் நாள் கூட பார்க்க யாரும் வராததால் பல தியேட்டர்கள் படத்தை தூக்கி விட்டார்கள்.

இருப்பினும் படத்திற்காக சக்சஸ் மீட்டிங் என்று ஒரு விழாவை எடுத்து கேக் வெட்டி கொண்டாடினர். இப்படி வெளி உலகத்திற்கு படத்தை வெற்றி படம் என்று காட்டினாலும் தயாரிப்பாளர்களுக்கு தான் தெரியும் அந்த படத்தின் மோசமான வசூல் விவரம். அதன் பின் ஓடிடி-யிலும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படமும் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தில் பெண்களின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகின்றனர் என்பதை நடித்துக் காட்டினார். இருப்பினும் படத்தில் ரசிகர்கள் விரும்பிய சுவாரஸ்யம் சுத்தமாகவே இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. இப்படி ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த இரண்டு படங்களுக்கும் போதிய வரவேற்பு கிடைக்காமல் போனாலும், அவர் மறுபடியும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இன்னொரு படத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இயக்கும் சொப்பன சுந்தரி என்ற படத்தை டார்க் காமெடி ஜானரில் உருவாகி உள்ளனர். விரைவில் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த படமும் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இரண்டு தோல்வி படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையாக கொடுத்தாலும் சம்பளத்தில் மட்டும் கராராக இருக்கிறார். இவர் மட்டுமல்ல அனைத்து நடிகைகளும் தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.