ஜொலிக்க முடியாமல் போன வெற்றி பட நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷ் போல் வளர முடியாத ஹீரோயின்

HEROINE WHO FAILS TO SHINE : தமிழ் திரையுலகில் புதுப்புது திறமை வாய்ந்த நடிகர் நடிகைகள், கதைகள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து அசத்திய படங்கள் ஏராளம். இதில் உமன் சென்டிரிக் என்று சொல்லப்படும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் படங்கள் அதிகமாக வந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படி வந்த படங்கள் சக்கை போடு போட்டு ஓடியும் அதில் நடித்த எல்லா நடிகைகளும் இப்போது நடிக்கிறார்களா என்றால் இல்லை தான்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகைகள் நடித்து வெளிவந்த எல்லா படங்களுமே நல்ல தரம் வாய்ந்த படங்களாகவே இருக்கிறது. அறம், காற்றின் மொழி, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் வெளியே வந்து அசத்துகின்றன. நயன்தாரா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் பெண்களை மையமாக வைத்து நடிக்கும் கதையில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகின்றனர். இப்படி கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை தங்கள் தனிப்பட்ட ஆர்வமாக ஆசையாக கொண்டு நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்தும் வருகின்றனர்.

இவ்வாறு உமன் சென்டிரிக் படங்கள் அதிகம் காணப்படுகின்ற நேரத்தில் அப்படி தமிழில் வெளிவந்த படம் தான் அருவி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அதிதி பாலன்.  இவர் முதன்முதலாக கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார். அதன் பின் 2017 ஆம் ஆண்டு அருவி என்ற இந்த படத்தில் நடித்து தமிழ் திரையுலகற்கு அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பை பெற்றார். குறைந்த செலவில் படமாக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் மட்டுமல்ல வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை குறும்பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் என்பவர் இயக்கி இருந்தார்.

ஒரு முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலிகளைச் சொல்லும் கதையாக எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக படமாக்கி இருப்பார் இயக்குனர். அந்த புதுமையான புரட்சிகரமான கதாபாத்திரத்திற்கு தன் அபாரமான நடிப்பால் உயிர் கொடுத்து சிறப்பாக நடித்திருப்பார். புதுமுக நாயகியா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார் அதிதி பாலன்.

ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு அதிதி பாலனுக்கு நல்ல பெயர் கிடைத்த அளவிற்கு வேறு நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.