ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தந்தை ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் சொந்த பந்தங்கள் படத்தில் நடித்தால் அது சரியாக போகவில்லை என்று ரஜினி நம்புவதால் தனது மகள் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இதை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தில் அதர்வாவை ஹீரோவாக வைத்து எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அதர்வா கோடிகளில் சம்பளம் கேட்டு வருவதால் படக்குழு இவரை ஹீரோவாக போட தயக்கம் காட்டி வந்தனர்.
இதனால் அதர்வாவை டீலில் விட்டு வேறு இரண்டு நடிகர்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ளார். அதாவது இளம் நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்த எடுக்கப்பட்ட உள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்த பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருமே நன்கு கிரிக்கெட் விளையாட தெரிந்தவர்கள். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தில் சரியான தேர்வாக விஷ்ணு விஷால், விக்ராந்தை ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ராந்த் நடிப்பில் சமீபகாலமாக எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவில் வெளியாகவில்லை. மேலும் விஷ்ணு விஷாலும் ஒரு தரமான ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார். இவர்கள் இருவருக்குமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என நம்புகிறார்கள். இந்த படத்திற்கு லால் சலாம் என்று டைட்டில் வைத்து தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.