தள்ளிப்போகும் அஜித், தனுஷ் சந்திப்பு.. அப்ப அடுத்த பட இயக்குனர் யாரு.? தலையை பிச்சுக்கும் AK ஃபேன்ஸ்

Ajith: அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இதன் வசூல் 140 கோடிகளை நெருங்கி விட்டது.

இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டமும் அலைமோதுகிறது. இந்த வெற்றியை பட குழுவினரும் கொண்டாடியுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த வெற்றியை தலைக்கு கொண்டு செல்லாமல் கார் ரேஸில் பிஸியாகிவிட்டார் அஜித். பெல்ஜியமில் நடந்த ரேசில் இவருடைய டீம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

தள்ளிப்போகும் அஜித், தனுஷ் சந்திப்பு

இந்நிலையில் இவருடைய அடுத்த பட இயக்குனர் யார் என்ற கேள்வி முளைத்துள்ளது. தனுஷ் என ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் அவர்களின் சந்திப்பு தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.

இதனால் இவர் இயக்குனர் இல்லையோ என்ற குழப்பம் ரசிகர்களுக்கு உள்ளது. அதன்படி மே மாதம் இவர்களின் சந்திப்பு இருக்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இட்லி கடை படத்தின் படப்பிடிப்புக்காக தனுஷ் உட்பட அனைவரும் பாங்காக் சென்றுவிட்டனர். இதனால் அஜித்துடன் அவருடைய சந்திப்பு இப்போதைக்கு இல்லை என தெரிகிறது.

ஆனால் ஜூன் மாதத்தில் கதை சொல்லுங்கள் என அஜித் சொல்லியதாக ஒரு பேச்சு இருக்கிறது. இதற்கு இடையில் இதே குட் பேட் அக்லி டீம் அடுத்ததாக இணைய போவதாகவும் உறுதியான தகவல்கள் கசிந்துள்ளது.

எது எப்படியோ அக்டோபருக்கு பிறகு தான் அஜித் நடிக்கப் போகிறார். இதற்கு இடையில் தனுஷின் கதை பிடித்தால் அவர் ஓகே சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படி இல்லை என்றால் மீண்டும் அதிக் அவரை இயக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படி செய்திகள் பரவி வருவதால் ஏகே ஃபேன்ஸ் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.