அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்று டாப் நடிகர்களாக உள்ள விஜய், அஜித் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக உள்ளனர். இவர்களது படத்தைப் பற்றி ஏதாவது அப்டேட் வருமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய், வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
குடும்ப செண்டிமெண்ட் கலந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதேபோல் அஜித், வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்நிலையில் துணிவு படத்தின் சூட்டிங் மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இன்னும் வாரிசு மற்றும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடியாத நிலையில் அதற்குள்ளாகவே இப்படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டுள்ளது. ஏனென்றால் உச்ச நடிகர்களின் படங்கள் எப்போதுமே நல்ல வரவேற்பை பெறும்.
இதை கருத்தில் கொண்டு வாரிசு படத்தை சன் டிவியும், துணிவு படத்தை கலைஞர் டிவியும் பெற்றுள்ளது. ஆனால் விஜய், அஜித் இருவருக்குமே இந்த படத்தை வேறு ஒரு தொலைக்காட்சிக்கு கொடுக்க சொல்லி உள்ளனர். ஆனால் இரு படத்தின் தயாரிப்பாளர்களும் இதற்கு சம்மதிக்க வில்லையாம்.
ஏனென்றால் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்காவாசி படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட்டு வருகிறது. கமலஹாசனின் விக்ரம் படத்தையும் உதயநிதி வெளியிட்ட நல்ல லாபத்தை பார்த்தார். இந்நிலையில் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தையும் உதயநிதி தான் விநியோகம் செய்ய உள்ளார்.
மேலும் உதயநிதியை பகைத்துக் கொண்டால் படத்தை வெளியிட முடியாதது என்று தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் இந்த சேனலுக்கு தங்களது படங்களை கொடுத்துள்ளனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய்யால் எதுவும் மறுப்பு தெரிவிக்க முடியவில்லையாம்.