அவரு அமைதியா, நிதானமா இருந்த GAP-ல விஜய் உருவாக்கிட்டாங்க! தல வந்தா வாலு தன்னால அடங்கும் – பேரரசு

Director Perarasu: ஊர் பெயர்களை வைத்து படங்களை எடுத்து பேமஸ் ஆனவர்தான் இயக்குனர் பேரரசு. அதிலும் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீப காலமாக படங்களை இயக்குவதை தவிர்த்து வரும் பேரரசு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சினிமாவில் டாப் நடிகர்களாக திரையில் போட்டி போட்டுக் கொண்டிருப்பவர்கள் அஜித், விஜய். ஆனால் அஜித் சினிமாவை காட்டிலும் தனக்கு பிடித்த மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இதனால் அவர் இல்லாததை யூஸ் பண்ணிக்கிட்டாரு விஜய். அஜித் மட்டும் முழுமூச்சாக படத்தில் தொடர்ந்து நடித்தால் எல்லாம் சேஞ்ச் ஆயிடும்.

சினிமாவை அஜித் ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கிறார். அதனால் அவருக்கு எப்போது பிடிக்குமோ அப்போது மட்டுமே படங்களை நடிக்கிறார். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது. அஜித் தனக்கு பிடிச்சதை பண்ண கூடியவர். அதனால் சினிமால கான்சென்ட்ரேஷன் பண்ணாமல் இருக்காரு.

தனக்கென தனி ரசிகர் மன்றத்தை கூட உருவாக்க மறுத்துவிட்டவர். இவர் மட்டும் முழு மூச்சாக சினிமாவில் இறங்கினால் நிலைமையே வேறு. ஆனால் அதை பயன்படுத்தி தான் அமைதியாக நிதானமாக இருந்து சைடு கேப்பில் விஜய்யை உருவாக்கிட்டாங்க.

அதனால் தான் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் மீது ஆசை வந்துவிட்டது. சினிமாவில் விஜய், ரஜினி இருவருக்கும் பிரச்சனையும் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. இருப்பினும் 72 வயதில் ரஜினி தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார்.

விஜய்க்கு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு தரப்பினர் கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுவே அஜித் சினிமா தான் முக்கியம் என்று வந்தா இப்படி எல்லாம் பண்ண முடியாது. அவர் மட்டும் இடைவெளி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்தால் அப்போது தெரிஞ்சிடும்னு யார் பெரியவர் என்று, என்பதை இயக்குனர் பேரரசு ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.