பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாக கேட்ட அஜித்.. செமையா செக் வைத்து விட்ட தயாரிப்பாளர்

வினோத் இயக்கத்தில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாகி இருந்தது. இந்தப் படம் தமிழ்நாடு பொருத்தவரையில் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தற்போது டாப் நடிகர்களின் சம்பளம் 100 கோடியை தாண்டி உள்ளது. விஜய் ஒரு படத்திற்கு 110 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் அதைவிட தற்போது அஜித்தின் சம்பளம் சற்று குறைவு தான். ஏகே 62 படத்திற்கு சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி அஜித் கேட்டுள்ளார்.

ஏற்கனவே துணிவு படம் வெளிநாடுகளில் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. மேலும் அடுத்த படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகமும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உள்ளது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் கலவையான விமர்சனங்கள் தான் பெற்றது.

இதனால் ஏகே 62 படத்தின் மீது முழு நம்பிக்கையும் லைக்காவால் வைக்க முடியவில்லை. இப்போது படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசியை அஜித் சம்பளமாக கேட்பதால் தயாரிப்பு நிறுவனம் ஒரு முடிவெடுத்துள்ளது. அதாவது இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்து உள்ளார்களாம்.

மேலும் படத்தில் வரும் லாபத்தில் 40% சேரை அஜித்துக்கு சம்பளமாக கொடுத்து விடுவதாக லைக்கா கூறியுள்ளது. நீங்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் சம்பளம் கொடுக்க முடியாது, ஆகையால் படத்தின் வெற்றியை பொருத்து உங்களது சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அஜித் குழப்பத்தில் உள்ளாராம். இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டால் அவ்வளவு தான் என்று யோசித்து அஜித் லைக்கா முடிவுக்கு கட்டுப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் ஏகே 62 படத்தில் அஜித்தின் சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.