விஜய் பாடலை திரும்பத் திரும்ப போட சொல்லி கேட்ட அஜித்.. செம்ம ஹிட்டான பாடல் ஆச்சே!

தமிழ் சினிமாவில் தற்போது இரு இமயமாக இருப்பவர்கள்தான் நடிகர் விஜய் மற்றும் அஜீத். இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு தற்போது வரை ஒரு படத்தில் கூட இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான நட்பு நிலவி வருகிறது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ஏ.எல்.விஜய் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கி அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். இவர் இயக்கத்தில் வெளியான கிரீடம், தலைவா, தெய்வத்திருமகள், இது என்ன மாயம், மதராசப்பட்டினம், தாண்டவம் உள்ளிட்ட அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன.

இயக்குனர் ஏ.எல்.விஜய் கிரீடம் மற்றும் தலைவா ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருடனும் பணிபுரிந்த அனுபவம் மற்றும் துபாயில் இவர்களை சந்தித்த தருணம் என சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “மும்பையில் விஜய் மற்றும் படக்குழு அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அதே ஹோட்டலில் அஜித் ஆரம்பம் படத்திற்காக தங்கியிருந்தார். அப்போது ஹோட்டலில் அஜித்தை சந்தித்து தலைவா பட போஸ்டர் மற்றும் வாங்கண்ணா வணக்கங்கனா பாடலையும் போட்டுக் காட்டினேன்.

அந்த பாடலை கேட்ட அஜித் மீண்டும் போட சொல்லி விரும்பி கேட்டார். இந்த பாடல் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என்று கூறினார்” என இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.