அஜித் கொண்டாடிய பிரெண்ட்ஷிப் டே.. 3 நண்பர்கள் இல்லாமல் ஏகே சொல்ல வரும் விஷயம்

அஜித் தனது 33 ஆண்டுகள் திரைப்பயணம் முடிந்ததை ஒட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களை, சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் அதில் அறிக்கைகள் பொறிக்கப்பட்டிருந்தது.

திடீரென இந்த 33வது வருடத்திற்கு மட்டும், ஏன் அஜித் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இதற்கு முன்பு 32 -31 வது ஆண்டுகள் நிறைவடைந்ததற்கெல்லாம் இப்படி செய்தது கிடையாது. இதிலிருந்து அஜித் ஏதோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

சமீபத்தில் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துச் சொன்னார் அஜித். ஏ ஆர் முருகதாஸ், சிறுத்தை சிவா,ஆதிக் ரவிச்சந்திரன், அனிருத் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இவர்களுடன் இன்று வரை அஜித் நட்பு பாராட்டி வருகிறார்.

ஆனால் அஜித் உடன் நீண்ட காலமாக நட்பில் இருந்த வெங்கட் பிரபு இதில் இல்லை, அது மட்டும் இல்லாமல் அஜித் நண்பர் என்று சொல்லக்கூடிய மிர்ச்சி சிவா மற்றும் ரமேஷ் கண்ணா இதில் இடம்பெறவில்லை. இவர்கள் இல்லாமல் அஜித் நண்பர்கள் தினம் கொண்டாடி இருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.

ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்று கூறுவதில் இருந்து யாரை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்ததை சொல்கிறாரா என தோன்றுகிறது . ஆக மொத்தம் இந்த அறிக்கை மற்றும் ஃப்ரெண்ட்ஷிப் டே போட்டோ இதில் ஏதோ ஒரு உள்அர்த்தம் அர்த்தம் இருக்கிறது.