தமிழ் சினிமாவில் ஒரு மாதிரியான படங்களை எடுத்து வந்த இளம் இயக்குனர் ஒருவர் தல அஜித்தை சந்தித்த பிறகு மனமாற்றம் அடைந்து விட்டதாக சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் தன்மை அனைவருக்குமே தெரியும். எந்த ஒரு விஷயத்தையும் பக்குவமாக கையாள்பவர். அதேபோல் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என சிந்திக்கக் கூடியவர்.
அந்த வகையில் தல அஜித்தின் வெறியரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற காவிய திரைப்படங்களை கொடுத்தவர்.
அடுத்ததாக அவரது இயக்கத்தில் காதலை தேடி நித்தியானந்தா, பஹீரா போன்ற படங்கள் வெளியீட்டுக்கு ரெடியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுமே அடல்ட் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை சந்திப்பதற்கு முன்னாலேயே இந்த இரண்டு படத்தின் முக்கால்வாசி எழுத்து வேலைகளை முடித்து விட்டாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதன்பிறகு நேர்கொண்டபார்வை படத்தில் பணியாற்றும் போது அஜீத்துடன் ஏற்பட்ட சந்திப்பு, அவர் தனக்கு சொன்னது என எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு இனிமேல் தன்னுடைய படங்களை தரமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர் சொல்லியபடி பார்த்தால் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பஹீரா படத்தின் டிரைலரை பார்த்தால் அப்படி தெரியவில்லை. மற்ற படங்களை போல இந்த படத்திலும் பெண்களை காட்சிப் பொருளாக காட்டியிருக்கிறார்.
அஜித் பெண் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் போதே தள்ளி நின்று கண்ணியமாக எடுத்துக் கொள்பவர். அப்படி இருக்கையில் அஜித் நல்ல புத்திமதிகளைத் தான் சொல்லியிருப்பார். அஜித் பேச்சை கேட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக, பஹீரா போன்ற படங்களை எடுத்திருக்க மாட்டார். எதற்காக இந்த சொம்படிக்கும் வேலை என்பது தான் தெரியவில்லை.
