Ajith: இந்த வருடம் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. அதை அடுத்து அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனாலும் அடுத்த பட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். அந்த சஸ்பென்ஸ் கிட்டத்தட்ட உடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது போல் இப்படத்தையும் ஆதிக் தான் இயக்க இருக்கிறார். இது உறுதியான தகவலாக இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.
அந்த ரகசியமும் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஐசரி கணேஷ் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். கிட்டத்தட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டது.
ரிலீஸ் தேதி வரை லாக் செய்த AK
அட்வான்ஸ் கொடுப்பதற்கு நல்ல நாள் பார்த்து வருகிறார்களாம். இந்த சென்டிமென்ட் அஜித்துக்கு மட்டுமல்ல ஐசரி கணேசுக்கும் உண்டு. அதனால் நல்ல நாளில் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு அறிவிப்பும் வெளிவரும் என்கின்றனர்.
அது மட்டும் இன்றி எப்போது ஷூட்டிங், ரிலீஸ் எப்போது என்பது வரை உறுதியாகிவிட்டது. அதன்படி நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை அஜித் கால்ஷூட் கொடுத்திருக்கிறாராம்.
ஏனென்றால் மார்ச் மாதத்தில் அவருக்கு முக்கியமான ரேஸ் இருக்கிறது. அதற்குள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு மற்ற நடிகர்களின் காட்சிகள் எடுக்கப்படும்.
மேலும் இப்படத்தில் ஹீரோயினாக கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அடுத்த வருட மே அல்லது ஜூன் மாதம் படம் வெளியாக இருக்கிறது. இப்படியாக நடிப்பு, ரேஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார் ஏ கே.