2026 தேர்தல்ல இருக்கு கச்சேரி.. விஜய் ரசிகர்கள் மீது கொல காண்டில் இருக்கும் அஜித் வெறியர்கள், என்ன நடந்துச்சு.?

Ajith-Vijay: சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட அலப்பறைகள் இருந்தாலும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் வாய்க்கா தகராறு எப்போதுமே முடிவுக்கு வராது.

சம்பந்தப்பட்டவர்களின் படங்கள் வெளி வரும்போது எதிர் தரப்பினர் அதை காலி செய்ய ட்வீட் போடுவதில் தொடங்கி பர்சனல் விஷயங்கள் வரை வன்மமாக மாறிவிடுகிறது.

அப்படித்தான் நேற்று நடந்த சம்பவத்தால் அஜித் ரசிகர்கள் விஜய் ஃபேன்ஸ் மீது கொல காண்டில் இருக்கின்றனர். நேற்று அஜித் பத்மபூஷன் விருதை குடியரசு தலைவர் கையால் வாங்கினார்.

2026 தேர்தல்ல இருக்கு கச்சேரி

அதே சமயம் நடிகை ஹீரா ஜனவரி மாத தொடக்கத்தில் அவருடைய வெப்சைட்டில் போட்டிருந்த ஒரு பதிவு திடீரென ட்ரெண்ட் ஆனது. அதில் அவர், ஒரு நடிகர் தன்னை எப்படி ஏமாற்றினார்.

தன் திரையுலக வாழ்க்கை எப்படி போனது என்பதை பற்றி விரிவாக குறிப்பிட்டு இருந்தார். அந்த நடிகர் யார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அஜித் பற்றி தான் ஹீரா கூறியிருந்தார் என பல கமெண்ட்டுகள் குவிய தொடங்கியது. ஒரு நடிகையின் வாழ்க்கையை திசை மாற்றி விட்டார்.

ஆனால் வெளி உலகத்தில் நல்லவர் போல் இருக்கிறார் என அஜித் குறித்த மோசமான ட்வீட்டும் பரவத் தொடங்கியது. ஆனால் ஹீரா அப்படி எந்த பதிவும் போடவில்லை.

விஜய் ரசிகர்களே அப்படி ஒரு வெப்சைட் தொடங்கி பதிவை போட்டு இப்போது வேண்டும் என்று வைரல் செய்கின்றனர் என ஒரு தரப்பினர் வாதம் செய்தனர்.

அதை அடுத்து இப்போது அஜித் ரசிகர்கள் அடுத்த வருஷ தேர்தல் உங்களுக்கு பதிலடியாக இருக்கும். அப்ப காட்டுறோம் எங்க பவர் என்னன்னு என கொந்தளித்து வருகின்றனர்.

உண்மையில் ஹீரா தரப்பில் தான் இப்படி ஒரு பதிவு வந்ததா என்ற கேள்வியும் இருக்கிறது. அதே சமயம் விஜய் ரசிகர்கள் இப்படி ஒரு வேலையை பார்த்தார்களா என்பதும் தெரியவில்லை. ஆக மொத்தம் சோசியல் மீடியா இப்போது பரபரப்பாக இருக்கிறது.