AK64 பட அப்டேட்.. ஆரம்பம் முதல் ரிலீஸ் வரை

Ajith : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் ஃபேன் பாயாக இந்த படத்தை எடுத்திருந்தார். இதை அடுத்து சமீபத்தில் பத்மபூஷன் விருதை பெற்றிருந்தார்.

சமீபத்தில் அஜித் நேர்காணலில் பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை பெற்றிருக்கிறது. அதாவது அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எனக்கு இருப்பது மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதாக உணர்கிறேன்.

அவர்கள் என்னுடைய தொலைநோக்குப் பார்வையை உணர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தரமான படத்தை வெளியிட இருக்கிறேன். என்னுடைய அடுத்த படம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

ஏகே 64 அப்டேட் கொடுத்த அஜித்

2026 இல் கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்றும் அஜித் கூறியிருக்கிறார். இதில் அஜித் ஏகே 64 படத்தின் அப்டேட் கொடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான இயக்குனர் யார் என்ற விவரம் விரைவில் வெளியாகும்.

ஒரே நேரத்தில் சினிமா மற்றும் ரேசிங் என இரட்டை சவாரி செய்வதால் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. ஆகையால் ரேசிங் சீசன் சமயத்தில் படங்களில் நடிக்க மாட்டேன். ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

மேலும் அஜித் தற்போது உடல் எடை குறைத்து பிட்டாக இருக்கிறார். 42 கிலோ உடை எடை குறைய சைக்கிளிங், டயட், ஸ்விம்மிங் மற்றும் சைவ உணவு ஆகியவற்றால் இது சாத்தியமானது என்று அஜித் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.