நாளை பிறந்தநாள், இன்று அப்பல்லோவில் அனுமதி.. அஜித்துக்கு என்ன ஆச்சு.?

Ajith: சில தினங்களுக்கு முன்பு அஜித் குடியரசு தலைவர் கையால் பத்மபூஷன் விருதை பெற்றார். அதை அடுத்து சென்னை திரும்பியவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இன்று காலை அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நாளை அவருடைய 54வது பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவருக்கு என்ன ஆச்சு என பதட்டத்தோடு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித்துக்கு என்ன ஆச்சு.?

ஆனால் இது வழக்கமான செக்கப் தான். பரிசோதனை முடிந்த விரைவில் வீடு திரும்பி விடுவார் என செய்திகள் வந்துள்ளது. எப்போதுமே அஜித் ஒரு படப்பிடிப்புக்கு செல்லும் போது முழுமையான செக்கப் செய்து கொள்வார்.

அது மட்டும் இன்றி மே 18ஆம் தேதி அவருக்கு நெதர்லாந்தில் ரேஸ் இருக்கிறது. அதனால் தான் இந்த பரிசோதனை மேற்கொள்ள அவர் சென்றுள்ளார்.

மற்றபடி யாரும் பயப்பட வேண்டாம் என மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளது. அதன் பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.