லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை

Leo – Vidamuyarchi : அஜித் இப்போது தனது விடாமுயற்சி படப்பிடிப்பில் மும்மரம் காட்டி வருகிறார். அதுவும் தீபாவளி பண்டிகைக்கு கூட படக்குழு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆனால் இந்த படத்தைப் பற்றி தற்போது வரை ஒரு சின்ன அப்டேட் கூட வெளியாகாமல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் அஜித் தானாம். அதாவது சமீபத்தில் லியோ படம் ஏற்படுத்திய அலையினால் தான் அஜித் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதாவது இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு எதிர்பார்ப்பு எந்த படத்திற்கும் இருந்ததில்லை. அவ்வாறு ஹைப்பை அதிகமாக்கி விட்டதால் தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

சாதாரணமாக விட்டிருந்தால் கூட படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும். எதிர்பார்ப்பினால் இரண்டாவது பாதி ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் தள்ளி இருந்தது. இதனால் தான் இப்போது விடாமுயற்சி படத்தைப் பற்றிய அப்டேட் மற்றும் புகைப்படங்கள் எதுவும் வெளியில் வரக்கூடாது என்று அஜித் படக்குழுவுக்கு கட்டளை போட்டு இருக்கிறார்.

மேலும் நம்மளுடைய வேலையை சரியாக செய்தாலே போதும். கண்டிப்பாக படம் நன்றாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகமாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் செயல் விடாமுயற்சி படத்தில் இருக்கக் கூடாது என்பதை கடுமையாகவே அஜித் கூறி இருக்கிறார்.

இதனால் தான் விடாமுயற்சி படத்தைப் பற்றிய சின்ன தகவல் கூட வெளியாகாமல் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே ரசிகர்களை கிட்டத்தட்ட ஒரு வருடமாக அஜித் காக்க வைத்துவிட்டார். ஆகையால் முழு வீச்சாக விடாமுயற்சி படத்தை எடுத்துவிட்டு சீக்கிரம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற விரும்புகிறார்.