Ajith: அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கிடைத்தது. இதற்கு அரசியல் பிரபலங்கள் தொடங்கி திரைத்துறையினர் ரசிகர்கள் என அனைவரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
அதேபோல் நேற்று அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். அத்துடன் அவரின் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியும் பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி சோசியல் மீடியாவில் அஜித் பற்றிய செய்திகள் தான் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
அஜித்தின் நேர்மையான பேட்டி
அதில் அவர் தன்னுடைய முந்தைய படங்கள் தனக்கு ரொம்பவும் குற்ற உணர்ச்சியை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு பிராயச்சித்தமாக தான் பிங்க் பட ரீமேக்கில் அவர் நடித்தாராம்.
பெண்களை ஸ்டாக்கிங் செய்வதை ஊக்குவிப்பது போல் படங்களில் நடித்திருக்கிறேன். அதை பார்க்கும் போது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
ஏனென்றால் திரையில் நாம் செய்வதை தான் ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். அதனால்தான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து என் குற்ற உணர்ச்சியை போக்கிக் கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டியது. அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர்.
ஒரு பெரிய நடிகராக இருந்தும் கூட என் படங்களில் இப்படி இருந்தது என அவர் ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் தான்.
அதற்கான பிராயசித்தம் செய்தேன் என்று அவர் நேர்மையாக சொன்னதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியாக அவர் அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.