பெண் இயக்குனர்களின் பிடியில் அஜித்.. புது முயற்சியில் வரப்போகும் அடுத்தடுத்த படங்கள்

அஜித் இப்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இந்த படத்தின் ப்ரோமோஷன் படு ஜோராக களைகட்டி இருக்கிறது. அதனால் படத்தின் ட்ரைலரை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தை அடுத்து அஜித் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் அவருக்கு இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச சம்பளம் பேசப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் அந்த படத்திற்கு பிறகு அஜித் சிறிது காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே அவர் இப்போது சில திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

அந்த வகையில் அஜித் இப்போது சுதா கொங்கரா கூறிய கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். தேசிய விருது இயக்குனராக புகழ் பெற்றிருக்கும் அவர் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கும் அவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் அஜித்துக்கும் கதை கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட உறுதியான இந்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் புஷ்கர் காயத்ரியின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறாராம். விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் மிரட்டிய அவர்கள் அஜித்துக்காக படு பயங்கரமான ஆக்ஷன் கதை ஒன்றைக் கூறி இருக்கிறார்கள்.

அதைக் கேட்டு ரொம்பவும் இம்ப்ரஸ் ஆன அஜித் நிச்சயம் இந்த படத்தை பண்ணலாம் என்று உறுதி கூறி இருக்கிறாராம். அந்த வகையில் அவர் அடுத்தடுத்த படங்களை இவ்வளவு வேகமாக கமிட் செய்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பெண் இயக்குனர்களின் படங்களில் அவர் நடிக்க இருப்பது சுவாரசியத்தையும் கூட்டி இருக்கிறது.

இதற்கு முன்னதாக அவருடைய வலிமை திரைப்படம் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக இந்த வருடம் தான் ரிலீஸ் ஆனது. இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதை ஈடுகட்டும் வகையில் தான் அஜித் அடுத்தடுத்த திரைப்படங்களை இவ்வளவு வேகமாக கமிட் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு இந்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது.