அஜித் யார் பின்னணியும் இல்லாமல் தனி ஒருவராக முயற்சி செய்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் வென்று ஒரு மாஸ் ஹீரோவாக இடம் பிடித்திருக்கிறார். இவருக்கு வராத பிரச்சனைகளை இல்லை அத்துடன் இவர் படங்களிலும் அதிக சரிவை பார்த்திருக்கிறார். ஆனாலும் எந்தவித தளர்வு ஆகாமல் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வதில் இவரை மிஞ்சும் அளவிற்கு ஆளே கிடையாது.
அத்துடன் இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் ஜோசியம் பார்ப்பதிலும் கில்லாடியாக இருந்திருக்கிறார். இவருக்கு ஆன்மீகம் அதிகமாக பிடிக்கும். அதற்காக மாத மாதம் எப்படியாவது கோயிலுக்கு சென்று வழிபடுவார். மேலும் இவர் கங்கை அமரன் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் வீட்டில் தான் இருப்பார், சாப்பிடுவார் அந்த அளவிற்கு இவர்களிடையே பழக்கம் இருந்திருக்கிறது.
அப்பொழுது கங்கை அமரன், வெங்கட் பிரபுக்கு ஏதோ ஒரு வாய்ப்பை கொடுத்து அதில் நீங்கள் நடிக்கலாமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அஜித் என்னை எட்டாம் இடத்தில் குரு பார்த்து வருகிறார் அதனால் நான் சொல்லும் போது செய்யலாம் என்று கூறியிருக்கிறார். இவர்களும் அஜித் சொல்லும் வரை காத்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் பின் அஜித் வெங்கட் பிரபுவை கூப்பிட்டு இப்பொழுது நாம் இணைந்து செயல்பட்டால் அது வெற்றி பெறும் என்று கூறி அதற்கான வேலையை பார்க்கவும் சொல்லி இருக்கிறார். அந்த நேரத்தில் வெங்கட் பிரபு ஏற்கனவே ஒரு படத்திற்காக கதையை வேறு நடிகரை வைத்து எழுதி இருக்கிறார். ஆனால் இதைத் தெரிந்த அஜித் இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்திருக்கிறார். அப்படி நடித்து வெளிவந்து ஹிட் கொடுத்த படம் தான் மங்காத்தா.
அந்த நேரத்தில் அஜித் கணித்த ஜோசியத்தின் படி வெங்கட் பிரபுவுடன் சேர்ந்ததால் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு அப்புறம் கங்கை அமரன் குடும்பம் மொத்தமே இவருடைய ஜோசியத்திற்கு அடிமையாகி விட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு முக்கிய செயலுக்கும் அஜித்திடம் கேட்ட பிறகு தான் செய்ய ஆரம்பிப்பார்களாம்.
அதன் பின் இன்று வரை அவர் எந்த படத்தை எடுத்தாலும் அதற்கு பெயர் வைப்பதற்கு அஜித்திடம் கேட்டு அவர் கணித்த பிறகு தான் பெயர் வைத்து அதற்கு ரிலீஸ் தேதியும் சொன்ன பிறகு தான் வெளியிடுவார்கள் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அஜித்திடம் இப்படி ஒரு சக்தி இருக்குது என்றால் அவர் படங்களுக்கும் அவர் கணித்து அதற்கு ஏற்ற மாதிரி நடிக்கலாமே என்பது குறிப்பிடத்தக்கது.