வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. வரும் 15ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எனவே அன்றைய தினம் அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவை தெறிக்க விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமாவில் அஜித் குமார் வைத்து பல இயக்குனர்களும் பல படங்களில் பணியாற்றி உள்ளனர்.
அஜித்தை பொறுத்தவரை அவரது படத்திற்கு எந்த விளம்பரமும் தேவையில்லை அவரது ரசிகர்களே போதும். தற்போது வலிமை படம் வெளியாவதற்கு முன்பே தமிழ்நாடு முதல் யூரோ கால்பந்து வரை அவரது ரசிகர்கள் பிரபலப்படுத்தி உள்ளனர். அந்த அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் தான்
ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில், 250 கோடி அளவுக்கு படம் பிசினஸ் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான், வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அழகன் என்றாலே அஜித் தான் என புகழ்ந்து வருகிறார்கள்.