இப்போதே சூடு பிடிக்க தொடங்கிய வலிமை பட வியாபாரம்.. எத்தனை கோடி தெரியுமா?

கோலிவுட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது வலிமை தான். அஜித் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியாகும் படம் என்பதாலும், படத்தின் இயக்குனர் வினோத் என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக வலிமை படத்துடன் எந்தவொரு தமிழ் படமும் மோதவில்லை.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் குறித்து வெளியான பல்வேறு மீம்கள் மற்றும் கேலி கிண்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிள், பர்ஸ்ட் லுக் வீடியோ ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் இப்போதோ படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

அதன்படி வலிமை படத்தின் தமிழக வினியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து வாங்கியுள்ளதாம். தற்போது ஏரியா வாரியாக படத்தை விற்கும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்துடன் மோத விரும்பாததால் வேறு எந்த படங்களும் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதனால் வலிமை படத்திற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு படம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு போட்டியாக வேறு எந்த பெரிய பட்ஜெட் படங்களும் வெளியாகாததால் இப்படத்தை வாங்க பலரும் போட்டி போட்டு வருகிறார்களாம்.