தமிழ்நாட்டில் சம்பவம் செய்த அஜித்தின் 6 படங்கள்.. வசூலை வாரி சுருட்டிய குட் பேட் அக்லி

Ajith: அஜித் தற்போது நடிப்பை தாண்டி கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருடத்தில் ஒரு பாதி நடிப்பு ஒரு பாதி ரேஸ் என பிரித்து வேலைகளை பார்த்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் குட் பேட் அக்லி வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்த அப்படம் தியேட்டர்களில் பலத்த வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில் தற்போது வரை அதன் வசூல் 230 கோடியாக இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் படம் வசூலில் சக்கைபோடு போட்டுள்ளது.

வசூலை வாரி சுருட்டிய குட் பேட் அக்லி

அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் வெளியான கடந்த ஆறு படங்கள் தமிழ்நாட்டில் செய்த வசூல் வேட்டை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

2019-ல் வெளிவந்த விசுவாசம் தமிழ்நாட்டில் 131 கோடிகளை வசூலித்தது. அதே வருடத்தில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை 70.5 கோடிகளை வசூல் செய்தது.

2022ல் வலிமை வெளியாகி தமிழ்நாட்டில் 110 கோடிகளை வசூலித்தது. அடுத்ததாக 2023ல் துணிவு வெளியாகி 121.5 கோடிகளை வசூலித்தது.

அதை அடுத்து இந்த வருடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பல தடைகளைத் தாண்டி விடாமுயற்சி வெளியானது. அப்படம் தமிழகத்தில் மட்டுமே 84 கோடிகளை வசூலித்தது.

அதை அடுத்து ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவந்த குட் பேட் அக்லி தமிழகத்தில் மட்டும் 172 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவே அஜித்தின் அதிகபட்ச தமிழக வசூல் ஆகும்.

இப்படியாக பெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விரைவில் அதன் அறிவிப்பு வெளிவர உள்ளது.