பெரிய மனுசனாக நடந்து கொள்ளாத போனி, மனக்கசப்பில் அஜித்.. துணிவை டீலில் விட்ட AK

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார். அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நிலையில் படத்திற்கு சிறு சிக்கலும் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது அஜித் இன்னும் டப்பிங் வேலைகளை முடித்து கொடுக்க வில்லையாம். ஏற்கனவே இந்த படத்தின் பாதியிலிருந்தே அஜித்திற்கும் படகுழுவிற்கும் சில விஷயங்களில் சிறு மனக்கசப்பு இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து இருக்கிறது.

அந்த வகையில் அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பள பணம் இன்னும் முழுதாக செட்டில் செய்யப்படவில்லையாம். அதனால் தான் அவர் டப்பிங் வேலையை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்த நிலையில் அஜித் இப்போது பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவருக்கான சம்பளம் மொத்தமும் செட்டில் செய்யப்பட்டால் மட்டுமே அவர் டப்பிங் பேச வருவாராம். இப்போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமல் டென்சனோடு இருக்கிறாராம். வாரிசு படத்துடன் மோதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உதயநிதி அவசர அவசரமாக படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

ஆனால் அஜித்துக்கான சம்பளம் எப்போது கொடுப்பது, அவர் எப்போ வந்து டப்பிங் வேலையை முடித்துக் கொடுப்பது என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சமாளித்து உதயநிதி ஸ்டாலின் படத்தை சொன்ன தேதியில் வெளியிடுவாரா என்றும் தெரியவில்லை.

இப்படி துணிவு படத்தில் ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள் இருக்கிறது. இருப்பினும் அஜித்தை சமாதானப்படுத்தி டப்பிங் பேச வைக்கவும் ஒரு குழு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் விரைவில் அஜித் தன்னுடைய வேலையை முடித்துக் கொடுத்து விடுவார் என்றும் அவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.