இனிமேல் அசைக்க முடியாத இடத்தில் அஜித்.. ஏ கே பார்த்த அந்த ருசி

அஜித் குமார் பத்ம பூசன் விருது வாங்கியாச்சு. இதற்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பது போல் பல பேருக்கு கூறி வருகிறார்கள். விஜய்யை போல அஜித்தும் அரசியலுக்கு வருவதற்கு இது முதல் படிக்கட்டாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கொடுக்கும் இந்த விருது அஜித் ரசிகர்களை வளைப்பதற்கு போட்ட திட்டமாம்.

ஒரு பக்கம் விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமா கேரியருக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார். இனிமேல் அஜித்துக்கு திரைத்துறையில் சரியான போட்டியாளர் இல்லை. அவரும் கார் ரேஸில் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டி வருகிறார், மாறாக படத்தில் நடிப்பதை குறைத்துள்ளார்.

அடுத்து அஜித் எந்த இயக்குனருக்கு படம் கொடுப்பார் என்பதே தெரியவில்லை. ஒரு பக்கம் ஆதிக்க ரவிச்சந்திரன் உடன் மீண்டும் ஒரு கூட்டணி என்கிறார்கள், இன்னொரு பக்கம் கார்த்திக் சுப்புராஜ் என்றும் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் அஜித் மனதில் இருக்கும் யோசனை வேறு.

அக்டோபர் மாதம் முடிந்த பிறகு தான் அவர் இந்தியா வருகிறார். துபாயில் முக்கியமான கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள போகிறார். அது முடிந்த பின்னரும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஒரு ரேஸ் பந்தயம் இருக்கிறதாம். அதனால் இப்போதைக்கு அவர் எந்த இயக்குனர்களுடனும் கமிட்டாகவில்லை.

முழுக்க முழுக்க அஜித்திடம் இப்பொழுது கார் ரேஸ் ருசி தான் காணப்படுகிறது. சக போட்டியாளரான விஜய் இல்லாத இந்த நேரத்தில் படங்களில் நடிப்பது முக்கியமில்லை, தன்னுடைய பேஷனான கார்பந்தம்தான் முக்கியம் என்று அதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இனிமேல் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அஜித் நடிக்க போகிறாராம்.