Actor Dhanush: தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் இந்த வருட இறுதியில் படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து தனுஷ் நடிக்கும் ஹிந்தி பட அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவர் படத்தில் நடிக்க இருந்த அஜித் மச்சினிச்சி ஒவ்வொரு ஆட்டிடியூட் காட்டிய காரணத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். குழந்தையின் நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த ஷாமிலி வளர்ந்த பிறகு ஹீரோயின் ஆகவும் என்ட்ரி கொடுத்தார்.
அந்த வகையில் தெலுங்கில் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடித்த இவர் தமிழில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வந்தார். அப்போது இவருக்கு கொடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் இரு வேடங்களில் நடித்த படத்தில் தம்பிக்கு ஜோடியாக நடிக்க முதலில் கமிட் ஆனவர் ஷாமிலி தான். ஆனால் இவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரமாட்டாராம்.
அதனாலேயே இவரால் பலமுறை சூட்டிங் கேன்சல் ஆகி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் லேட்டாக வருவது என கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார். இதனால் பொருத்து பார்த்த பட குழு இவரை வேண்டாம் என்று நீக்கி இருக்கிறார்கள். அதன் பிறகு தான் அனுபமா பரமேஸ்வரன் அந்த கேரக்டரில் நடிக்க வந்திருக்கிறார்.
இப்படி தன்னுடைய ஆட்டிடியூட்டால் பல வாய்ப்புகளை ஷாமிலி இழந்திருக்கிறார். இருப்பினும் விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படம் சரியாக போகவில்லை. அதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்த இவர் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் தன் அக்கா ஷாலினியின் குழந்தைகளோடு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியில் வைத்து பலரையும் வியக்க செய்தார். இப்படி ஓவர் ஆட்டிடியூட்டால் பட வாய்ப்புகளை இழந்த இவர் இப்போது நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.