தளபதி 68-க்கு ஆட்டம் காட்ட வரும் விடாமுயற்சி.. வட்டியும் முதலுமாக கொடுக்க தேதி குறிச்ச அஜித்

Actor Ajith: விடாமுயற்சி என்ற டைட்டில் அறிவிப்பை வெளியிட்டதோடு பட குழுவினர் அமைதியாகிவிட்டனர். ஆனால் பாவம் அஜித் ரசிகர்கள் தான் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என்று கதறாத குறையாக கேட்டு வந்தனர். ஆனாலும் பட குழு இதோ அதோ என்று இழுத்தடித்துக் கொண்டே வந்தது.

தற்போது அதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் விடாமுயற்சி படம் கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு முன்பு ஏமாற்றியது போல் இல்லாமல் இந்த முறை படப்பிடிப்பை தொடங்குவதற்கான அத்தனை வேலையையும் தயாரிப்பு தரப்பு செய்து விட்டதாம்.

அந்த வகையில் அஜித் இப்போது பைக் ரேஸை ஓரம் கட்டி விட்டு மேக்கப் போட்டு கேமரா முன்பு வருவதற்கு தயாராகி இருக்கிறார். அது மட்டுமின்றி தளபதி 68க்கு ஆட்டம் காட்டும் வகையில் விடாமுயற்சியை விஸ்வரூபமாக முடித்துக் காட்டவும் அவர் வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறாராம்.

ஏனென்றால் துணிவு படம் முடித்த கையோடு லியோ படத்திற்கு போட்டியாக அஜித் தன் படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல சோதனைகளின் காரணமாக இப்போது தளபதி 68 உடன் தான் விடாமுயற்சி மோத இருக்கிறது. ஆனாலும் அவர் வட்டியும் முதலும் ஆக திருப்பிக் கொடுப்பதற்கு தயாராகவே இருக்கிறார்.

அந்த வகையில் விடாமுயற்சி பட சூட்டிங் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடப்பதற்கான செட் வேலைகள் அனைத்தும் இப்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதை அடுத்து மலேசியாவில் படப்பிடிப்பை நடத்துவதற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசை கட்டி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு பட குழு இப்போது ஜோராக தங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாராகி இருக்கின்றனர்.