Actor Ajith: அஜித் ஆரம்பக் கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு தான் தற்போது இந்த நிலைமையே அடைந்திருக்கிறார். அதனால் இதில் என்னென்ன கஷ்டங்கள் எப்படி எல்லாம் வரும் என்று அவருக்கு நன்றாகவே அடிமட்டத்திலிருந்து பார்த்திருக்கிறார்.
திறமையுடன் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக கதையை வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த சிலருக்கு அஜித் முதல் வாய்ப்பு கொடுத்து அவர்கள் இயக்குனர்களாக ஆவதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் அஜித் நடித்த ஆசை மற்றும் உல்லாச படங்களுக்கு அசிஸ்டன்ட் உதவியாளராக இருந்த எஸ்ஜே சூர்யாக்கு கைகொடுத்து உதவிய படம் தான் வாலி.
இப்படம் அஜித் மற்றும் எஸ்ஜே சூர்யாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது தன் வந்த பாதையை மறந்து விட்டு எஸ்ஜே சூர்யா முழுக்க முழுக்க விஜய்க்கு கூஜா தூக்குகிறார்.அடுத்ததாக ஏஆர் முருகதாஸுக்கு கொடுத்த வாய்ப்பு தீனா. இப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமானார்.
அத்துடன் அஜித்துக்கு வேற லெவலில் இப்படம் அவருடைய இமேஜை மாற்றியது. ஆனால் ஏ ஆர் முருகதாஸ் பெரிய இயக்குனராக மாறிய நிலையில் தற்போது வரை அஜித்தை கண்டு கொள்ளவில்லை. இதற்கு அடுத்து ஏஎல் விஜய், கதையை தயார் செய்த நிலையில் இவரை நம்பி யாரும் நடிக்க வராத போது அஜித் இவரை முழுமையாக நம்பி இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்த படம் தான் கிரீடம்.
ஆனால் அதன் பிறகு ஏஎல் விஜய் மற்ற முன்னணி ஹீரோகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வைத்து இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்ததாக இயக்குனர் விஎஸ் துரை, இவர் புதிய இயக்குனர் என்பதால் பலரும் இவரை நிராகரித்த போது அஜித் இவருக்கு கொடுத்த வாய்ப்பு முகவரி.
இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆகி இருவருக்கும் பெரிய லாபத்தை கொடுத்தது. அடுத்ததாக அஜித், இயக்குனர் சரவண சுப்பையாக்கு கொடுத்த வாய்ப்பு சிட்டிசன். இப்படத்தின் மூலம் தற்போது பெரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி அஜித் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.