தல அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்து சென்றுள்ள விஷயம் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களை பரபரப்பாகியுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் இருக்காது என்கிற பேச்சுக்களே தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது. அதுவும் விஜய், அஜித் படங்களில் நடிகைகளை காட்சிப்பொருளாக பயன்படுத்துகின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டும் நீண்ட நாட்களாக இருக்கிறது.
ஆனால் அஜித் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் நடிகைக்கும் முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் விஜய் படங்களில் அது தொடர்ந்து மிஸ்ஸிங்.
இந்நிலையில் அடுத்ததாக அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருபவர்தான் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி.
இவர் ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் ஆர்மி ஆப் த டெத் என்ற படத்தில் நடித்துள்ளார்.
