அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது தான் இப்பொழுது கோடம்பாக்கத்தில் பரபரப்பு பேச்சாக மாறி வருகிறது. குட் பேட் அக்லி பட வெற்றிக்கு பின்னர் அஜித் படு உத்வேகத்தோடு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒரு பக்கம் தனுஷ் தான் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் அஜித் தற்போது கேட்கும் சம்பளத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சுமார் 250 கோடிகள் வரை கேட்கிறார் ஏ கே.
இப்படி பெரிய சம்பளத்தை கொடுக்கும் நிறுவனமாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் மட்டும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் அஜித்தின் அடுத்த படம் இவர்கள்தான் தயாரிப்பதற்கு 90% வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அஜித் மனதில் ஆதிக்ரவிச்சந்திரனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது.
குட் பேட் அக்லி பட ஷூட்டிங்கில் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் தயாரிப்பாளர் மைதிலி மூவி மேக்கர்ஸ் இருவருக்கும் இடைய ஒரு பெரிய உட்கட்சி பூசல் நடந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இந்த படத்தை ஆதிக் முடிக்கவில்லையாம், மாறாக கொடுத்த பட்ஜெட்டுக்கும் மீறி செலவு செய்துள்ளார்.
இதனால் அஜித் ஆசைப்படி ஆதிக் மற்றும் மைத்திரி கூட்டணி இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆதிக் படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனமும். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப் போகும் மற்றொரு படத்தை வேறு ஒரு இயக்குனரும் இயக்குவதற்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறார் அஜித்.