விஜய், அஜித் மோதும் கடைசி படம்.. மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தும் AK

Ajith Clash With Vijay’s Last Movie: விஜய் தீவிர அரசியலில் களமிறங்க முடிவு செய்துவிட்டார். சமீபத்தில் அவர் தன்னுடைய கட்சி அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து பல்வேறு யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் அவர் தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு மக்கள் பணியில் இறங்க உள்ளதாக வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இது யாருக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ அஜித் ரசிகர்களுக்கு தீபாவளியாக தான் இருக்கிறது. அதைத்தான் அவர்கள் இப்போது பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு இரு தரப்பினருக்கும் இடையே வாய்க்கா தகராறு இருந்தது.

அந்த வகையில் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துடன் அஜித்தின் விடாமுயற்சி மோத இருக்கிறது. ஏற்கனவே வாரிசு, துணிவு மோதி திரையுலகையே கலங்கடித்தது. அதை அடுத்து லியோவுடன் விடாமுயற்சி மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்காத நிலையில் GOAT படத்துடன் மோதியே ஆக வேண்டும் என்ற முடிவில் அஜித் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் விஜய் ஒப்புக்கொண்டிருக்கும் அடுத்த படத்திலும் கூட தன்னுடைய படம் மோத வேண்டும் என அவர் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன், ஹச். வினோத் இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இப்படத்தை விஜய்யின் கடைசி படத்துடன் மோதவிட்டு அப்படத்தின் வசூலை குறைக்க அஜித் திட்டமிட்டுள்ளாராம்.

ஆக மொத்தம் விஜய் சினிமாவில் இருந்து விலகும் நிலையிலும் கூட அஜித் அவருடன் போட்டி போட நினைக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த சண்டையில் மண்டை உடையாமல் இருந்தால் சரிதான்.