கந்தலாகி கிடக்கும் ஏகே 62.. ரணகளத்திலும் கிளுகிளுப்புடன் போஸ் கொடுத்த அஜித் லேட்டஸ்ட் லுக்

துணிவு படத்திருக்க பிறகு அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்த சமயத்தில் திடீரென்று அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

ஏனென்றால் அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை விக்னேஷ் சிவன் சரியாக செய்து முடிக்காததால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஏகே 62 படத்தின் நிலைமை கிழிந்து கந்தலாகி கிடக்கும் நிலைமையில் அஜித் தற்போது லண்டனில் ஜாலியாக வெக்கேஷனை என்ஜாய் பண்ணுகிறார்.

அதிலும் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அவரது பின்புறம் ஏகப்பட்ட பீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு, கடையின் பெயரே பீர் எழுதப்பட்டிருக்கும் இடத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்தபடி கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை வைத்து பார்த்தாலே அவர் எவ்வளவு ஜாலியாக லண்டனில் இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் ஏகே 62 பட குழு, அடுத்த இயக்குனர் யார் என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த ரணகளத்தில் அஜித்துக்கு இவ்வளவு கிளுகிளுப்பா! என்றும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் தாறுமாறாக கிண்டல் செய்கின்றனர்.

அதிலும் துணிவு படத்திற்காக அஜித் வைத்திருந்த நீண்ட தாடி போன்றவற்றை எல்லாம் நீக்கி, அவர் ஏகே 62 படத்திற்காக நியூ லுக்கில் மாறி இருக்கிறார். இந்த லுக் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்து விட்டோம். பிளாக் ஹேர் யங் லுக் ட்ரை பண்ணுங்க என்றும் தல ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் அஜித் குடியும் கூத்துமாய் லண்டனில் இருப்பதைப் பார்த்த ஏகே 62 பட குழுவிற்கு ஒரு திகிலா இருக்குது. மேலும் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். அந்தக் கதை விஜய்க்கு பிடித்த போக கடைசியில் அந்த படத்தின் பணிகள் துவங்காமல் போனதாம் இந்நிலையில் விஜய்க்கு மகிழ் திருமேனி வைத்திருந்த மாஸ் கதை தான் ஏகே 62 படமாக இருக்கலாம்.

லண்டனில் இருந்து லேட்டஸ்ட் லுக் புகைப்படம் வெளியிட்ட அஜித்

ajith-new-look-cinemapettai
ajith-new-look-cinemapettai